திருப்பதி சாரம் பெருமாள் கோயில் Thiruppathisaram Temple in Tamil
பகவான் எப்படி எல்லாம் பக்தர்களை ஆராதித்து அருள்பாலிக்கிறார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள், சம்பவங்கள், வரலாறுகள் உண்டு. அவர் பெரியவர்களின் அனுசரித்து உதவுகிறார். இறந்த குழந்தையையும் பேணிக்காத்து ஞானம் கொடுக்கிறார். பகவானுக்கு பக்தி தான் முக்கியம். மற்றவை இரண்டாம் பட்சம்தான். இந்த உண்மையை வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட 41 நாள் குழந்தைக்கு அருள் காட்டிய அற்புதமான சம்பவம் நடந்த இடம் தான் திருப்பதிசாரம்.
திருவட்டாரில் இருந்து தொடுவெட்டி ஊருக்கு வந்து அங்கிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி மார்க்கமாக நாகர்கோவிலுக்கு வரவேண்டும். நாகர்கோவிலில் இருந்து இரண்டரை மைல் தூரத்தில் இருக்கிறது திருப்பதிசாரம். மூலவர் திருக்குறளப்பன், திருவாழ்மார்பன் என்று வேறு பெயரும் உண்டு. தாயார் கமலவல்லி நாச்சியார். தீர்த்தம் லட்சுமி தீர்த்தம். விமானம் இந்திர கல்யாண விமானம். கருடனுக்கும், காளி, உடைய நங்கை, விந்தை போன்றவர்களுக்கும் பகவான் பிரட்தட்சம் ஆன புண்ணிய பூமி.
நம்மாழ்வாரின் தாயார் உடைய மருந்து அவதரித்த ஸ்தலம். இரணியனை சம்சாரம் செய்துவிட்டு பகவான் உக்ர ரூபமாக இருந்தபோது பிரகலாதன் பிரார்த்தனை செய்தான். அதற்கு இணங்கி சாந்த சொரூபத்துடன் லட்சுமியை தேடிவர, லட்சுமி ஆனந்தமடைந்து பகவானின் திருமார்பில் நித்திய வாசம் செய்தாள். பகவானுக்கு நித்திய ட 'திருவாழ் மார்பன்' என்று பெயர்.
நம்மாழ்வாரின் தாயார் நம்மாழ்வாரை ஈன்ற 41 ஆம் நாள் (வைகாசி விசாகத்தன்று நம்மாழ்வார் பிறந்தார்) குரு கூறியுள்ள ஆதிநாதன் சன்னதியில் இட்டார். மெல்ல தவழ்ந்து கோயிலிலுள்ள புளிய மர பொந்திற்குள்புகுந்தது. இதைக் கண்டு அனைவரும் வியந்து நிற்க. பொந்திலிருந்து குழந்தை யோக முத்திரையுடன் பத்மாசன யோகத்தில் அமர்ந்து ' மதுரகவி ஆழ்வாருக்கு' திருவாய்மொழி அருளியதாக ஸ்தல புராணம். இந்த இடத்தில்தான் ஆஞ்சநேயரின் பிரார்த்தனைக்கு இணங்க அகத்தியர் ராமாயணம் அருளியதாகவும் சொல்லப்படுகிறது. நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
பரிகாரம்
பெரியவர்கள் செய்த புண்ணியம் அவர்களுடைய குழந்தைகள் நல்லபடியாக பிறந்து, பெருமாளை சதா சர்வ காலமும் நினைத்து கைங்கரியம் செய்வது தான். நிறைய பெற்றோர்களுக்கு இப்படிப்பட்ட பாக்கியம் கிடைப்பதில்லை. அவ்விதமான பெற்றோர்கள் இம்சையிலிருந்து விடுபட, பாவங்களிலிருந்து குடும்பத்தை காப்பாற்ற வறுமையில் இருந்து தப்ப, ஆரோக்கியத்தை குறைக்கும் நோய்களில் இருந்து விலக திருப்பதிசாரம் வந்து நம்மாழ்வாரை ஆட்கொண்ட திருக்குறளப்பன் சன்னதியில் மனமுருகி பிரார்த்தனை செய்தால் போதும், பகவான் அவர்களது வேண்டுகோளை ஏற்பார்.