தமிழ்நாடு அல்லது தமிழகம் வரலாறு : Tamilnadu or Tamil Nadu in Tamil

தமிழகம் பழமையும் புதுமையும் கலந்த அற்புதமான மாநிலமாகும், இதன் தலைநகரம் சென்னை. இது இந்தியக் கலாச்சாரத்தின் தலைநகரமாகவும் திகழ்கின்றது. இதன் சிறப்பு வந்தவர்களை வாழ வைக்கும் தனித்தன்மை கொண்டது. இது திராவிட கலை மற்றும் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்ட பல கோயில்களை கொண்டது. தமிழகத்தில் பல பழமையான கோயில்கள் மசூதிகள் மற்றும்  தேவாலயங்களை கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறப்பு வாய்ந்த ஆன்மீகமா தளமாக திகழ்கின்றது. தமிழகம் பல வண்ணமயமான பண்டிகைகளையும், வீர விளையாட்டுகள்  நிறைந்த மாநிலமாக திகழ்கின்றது.

 தமிழகம் நிலநடுக்கோடு பகுதியை சேர்ந்திருப்பதால் வெப்பம் மிகுதியாக உடையது.  எனவே,  தமிழன் மெல்லிய ஆடையை உடுத்தி,   வெப்பம் தாங்கக்கூடிய வசதியுள்ள வீடுகளில் வாழ்கின்றனர்;  நீர் வளம்  சிறந்திருப்பதால்,  பயிரிட்டு உணவுப் பொருட்களை உண்டாக்கி உண்டு  மகிழ்கின்றனர்.  உணவுக்காக பெரும் பொழுதை இம்மக்கள்  கழிக்க வேண்டியதில்லைச  ஓய்வு நேரத்தை கல்வி,  கைத்தொழில் முதலியவற்றில் செலவிடுகின்றனர்.  ஆகவே,    இம்மக்களின்  நிலத்தின் தட்பவெட்ப நிலைக்கேற்ப,  மக்களுடைய உணவு உடை  இல்லம் வாழ்க்கை நாகரீகம் பழக்கவழக்கங்கள் பண்பாடு முதலியவை அமைவது இயல்பே.

தமிழ்நாடு வரலாறு

தமிழகத்தின் வரலாறு கற்காலத்தில் தொடங்கி சங்ககாலத்தில் மூவேந்தர்களால் வளர்ச்சி பெற்று  பல்லவர்களால் சிறப்பு பெற்றது. சங்க காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல்  கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தை சங்க காலம் என்கிறோம்.  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களையே சேரும். கிபி 300 முதல் கிபி 900 வரை பல்லவர் ஆட்சி நிலவியது.  இதனை பிற்கால பல்லவர் (கிபி 300 முதல் கிபி 600 வரை),  பிற்கால பல்லவர்(கிபி 575 முதல் கிபி 900 வரை)  என்று பிரித்துக் கூறுவர்.  பின்னர் பல்லவரின் இறுதிக்காலத்தில் பதவிக்கு வந்த சோழர்கள் கிபி 850 முதல் 1300 வரை தென் இந்தியா முழுவதையும் ஆட்சி புரிந்தனர்.  பல்லவர் பதவியில் இருந்த காலத்திலும்  தோழர் பதவியில் இருந்த காலத்திலும் பாண்டியர் செல்வாக்கு மதுரையில் மங்கியும் சில சமயம் மலர்ந்தும் காணப்பட்டது.  பின்னர் சோழர் மறைவுக்குப் பிறகு, பாண்டியர் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்றமிகு ஆட்சிபுரிந்தனர். கிபி பதினாறாம் நூற்றாண்டில் தான் மாலிக்காபூர் படையெடுப்பு நடைபெற்றது முகமதியர் ஆட்சி ஏற்பட வழிவகுத்தது.  பின்னர் விஜயநகர பேரரசின் பிரதிநிதிகள் தமிழகத்தை ஆண்டனர்.  பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில்  மதுரை,  தஞ்சை,  செஞ்சி ஆகிய பகுதிகளில் நாயக்கர்களின் ஆட்சி நிலவியது.  பதினேழாம் நூற்றாண்டின் இறுதி  முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை  மராட்டியர் ஆட்சி ஏற்பட்டது.  பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டு,  இந்தியா கிபி 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றது.

தமிழக கோயில்கள்

தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதிகள் உள்ளன. தமிழர்களின் பண்பாடு கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.  என்பதன் அடிப்படையிலேயே வளர்ச்சி பெற்றது ஆகையால் ஊர்கள் தோறும் கோவில்களும் சேர்ந்து வளர்ச்சி அடைந்தன.

தமிழகத்தின் நிலப்பிரிவுகள் 

தமிழகத்தின் நில இயற்கை அமைப்பு பற்றி அறிந்துகொள்ள அதனை முப்பெரும் பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம்.  அவையாவன 1.  மலைப் பகுதிகள்,  2. ஆறுகள்,  மற்றும் 3.  சமவெளிகள்.

தமிழகத்தின் மலைப் பகுதிகள்

தமிழகத்தின் மலைப்பகுதிகளை இரண்டு பிரிவுகளாக  இருக்கலாம்.  அவையாவன 1.  மேற்கு தொடர்ச்சி மலைகள் என்று 2.  கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

மேற்கு தொடர்ச்சி மலைகள்

மேற்கு தொடர்ச்சி மலைகள் சங்கிலித் தொடர் போல் தென்னகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.  மேற்கு தொடர்ச்சி மலை தொடர்ச்சியாக காணப்படினும் அதில் பல குறிப்பிடத்தக்க கணவாய்கள் அமைந்துள்ளன.  அவற்றில் பாலக்காடு,  ஆரல்வாய்மொழி,  செங்கோட்டை,  கொல்லூர், போடி,  நீலம்பூர் அச்சன் கோயில் முதலியன முக்கியமானவை.

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்  மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சந்திக்கும் பகுதியைக்  'கொங்குநாடு' என்றும் நம் மலைத்தொடர்களை நீல மலைகள் (Blue Mountains) என்றும் கூறுவர்.  இங்குதான்  குன்னூர்,  உதகமண்டலம்,  போன்ற இடங்கள் உள்ளன.  மற்றும் மிக உயர்ந்த 2,677  மீட்டர் உயரமுள்ள மலையான  "தொட்டபெட்டா" இங்குதான் உள்ளது.  இதனைவிட  ஆனை மலைகளில்  காணப்படும் ஆனைமுடி 2699  மீட்டர் உயரம் உள்ளது. கொடைக்கானல் இம்மலைத் தொடரில் தான்  காணப்படுகிறது. இங்கு ஏலமலை,  அகத்தியமலை போன்றவையும் குறிப்பிடத்தக்கன.

இருளர்,  தோதவர்,  முதுவர்,  புலையர், காடர் போன்ற பழங்குடி மக்கள்  மலைத் தொடர்களில்  வாழ்கின்றனர்.  இங்கு பாக்கு,  தேக்கு,  ஏலக்காய்,  தேயிலை முக்கிய விளைபொருள்கள் ஆகும். இம்மலைத் தொடரில் பல ஆறுகள் தோன்றி தமிழ்நாட்டை வளப்படுத்துகின்றன.

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

மேற்கு தொடர்ச்சி மலைகளை விட குறைந்த அளவிலேயே உள்ள இம்மலைத் தொடரில் பல இடைவெளிகள்  காணப்படுகின்றன.  ஜவ்வாது மலை,  சேர்வராயன் மலை,  கல்வராயன் மலை,  பச்சை மலை,  கஞ்சமலை,  கொல்லிமலை முதலியவை.  இம்மலைத் தொடர்களிலும் ஆறுகள்  உண்டாகின்றன என்றாலும் அவைகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகளுடன் இணைந்து  கடலில் கலக்கின்றன.

தமிழ்நாடு ஆறுகள்

காவிரியாறு,  பாலாறு,  தென்பெண்ணை,  வைகை,  பெருநை, குண்டாறு,  வைப்பாரு,  பழையாறு  போன்ற பல ஆறுதல் தமிழகத்தில் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கின்றன. பெரியாறு,  பம்பை,  சீதையாறு,  சொர்ணகிரியாறு, பேப்பூராறு, நெந்திரகிரிகிரியாறு,  பட்டினத்தாறு போன்ற ஆறுகள்  மேற்கு மலைத் தொடரில் தோன்றி,  அரபிக்கடலில் கலக்கின்றன. 

குடகு நாட்டில் சைய மலையில் தோன்றும் காவிரி ஆறு  'தென்னாட்டு கங்கை'  என்று அழைக்கப்படுகிறது.  கர்நாடக மாநிலத்தில் கண்ணம்பாடி என்ற அணை இவ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது,  இவற்றின் அழகு காட்சியை சிவசமுத்திரம் என்ற அருவியாகும்.  இது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி யாகவும்தர்மபுரியில் காணப்படுகின்றது.  மேட்டூரிலும்  மேட்டூர் அணை இதன் குறுக்கே ஓர் அணை கட்டப்பட்டுள்ளது. திருச்சி அருகே இரண்டாக பிரிந்து பின்னர் இணைகின்றது.  காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டி வைத்த கல்லணையும்,  கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்ட மேலணையும், தென்னாட்டின் வழமைக்கு வழிகாட்டிகளாகும். கல்லணையிலிருந்து பிரியும்  காவிரி ஆறு பல சிறு ஆறுகளை கொண்டுள்ளது.  அவற்றில் வெண்ணாறு,  குடமுருட்டி ஆறு, அரிசிலாறு,  வெட்டாறு, வீரசோழன் ஆறு,  திருமலைராசன்  ஆறு போன்றவை முக்கியமானவை. இதன் நீளம் சுமார் 765 கிலோ மீட்டர் ஆகும்.

கர்நாடகத்தில் உள்ள நந்திதுர்கம் என்ற மலையில் உற்பத்தியாகும் பாலாறு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைக் கடந்து தமிழ்நாட்டின் வட ஆர்க்காடு,  செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓடி,  சதுரங்க பட்டினத்தில் கடலில் கலக்கிறது.   இதன் நீளம் சுமார் 348 கிலோ மீட்டராகும்.  கர்நாடகத்திலுள்ள சென்ன கேசவ மலையில்  தோன்றும் தென் பெண்ணையாறு, சேலம்,  தென்னார்க்காடு மாவட்டங்களில் பாய்கிறது. இதன் நீளம் 420 கிலோ மீட்டர் ஆகும்.  இவற்றின் குறுக்கே சாத்தனூர் என்ற இடத்தில்  அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.  வைகை அணை மதுரை  மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டுகின்றது.  இவற்றின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டுள்ளது. ஏலமலையின் மேற்கில் ஓடும் பேரியாற்று நீ சுருளி ஆற்றில் கலப்பதால் அதிக நீரை பெறுகிறது.  அகத்திய மலையில் தோன்றும் பொருநை ஆறு (தாமிரபரணி)  திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்கிறது.  இதில் பாபநாசம் என்று அருவி உள்ளது.  இது பெரும்பாலும் மழையையே நம்பி உள்ளது இதன் நீளம் சுமார் 120 கிலோ மீட்டர் ஆகும்.

மகேந்திர மலையில் தோன்றும் கோதையாறு விளவங்கோடு,  கல்குளம் ஆகிய பகுதிகளிலும்,  அதனை அடுத்த மலையில் தோன்றும் பழையாறு(பறளியாறு) தோவாலை, அகத்தீஸ்வரம் ஆகிய பகுதிகளிலும் பாய்ந்து பயனளிக்கின்றது.

தமிழ்நாடு  சமவெளிகள்

தமிழகத்தின் தன்னிகரில்லா வளர்ச்சிக்கு அதன் சமவெளிப் பகுதிகள் முக்கிய காரணமாகும். மாடு கட்டி போரடித்தால் மாளாது தென்மதுரை என்று யானை கட்டிப் போரடிக்கும் அழகிய தென் மதுரை பகுதி; தோழா மண்டலபகுதியாக நன்செய் நிலங்கள் கொண்ட தஞ்சை, திருச்சி ஆகிய பகுதிகள் குறிப்பிடத்தக்க வளமான பகுதிகளாகும். இவ் வளமிக்க  பகுதியை 'கர்நாடகச் சமவெளி'  என்று கூறுவர்.  இதனை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம் அவையாவன 1) காவிரி பாயும் சமவெளி 2)  வைகை தாமிரபரணி பாயும் சமவெளி 3)  வடகிழக்கிலுள்ள தாழ் நிலங்கள்.

காவிரி பாயும் சமவெளி

 தர்மபுரி, கோவை, சேலம், திருச்சி, தஞ்சை ஆகிய ஐந்து மாவட்டங்களும்  காவிரி பாயும் சமவெளிப் பகுதிகள் ஆகும்.  நெல்,  பயறு,  கம்பு,  கேழ்வரகு,  பருத்தி,  புகையிலை,  நிலக்கடலை முதலியன முக்கிய விளைபொருட்கள்.

வைகை தாமிரபரணி பாயும் சமவெளி

இவ்விரண்டு ஆறுகள் மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் பாய்ந்து பயனளிக்கின்றன.  இவற்றின் குறுக்கே  கட்டப்பட்ட அணைகளிலும் மழைக்காலங்களில் நீர் தேக்கப்பட்டு அவை தேவையான முறையில் பல இடங்களுக்கு விடப்படுகின்றன.  நெல், கரும்பு, கிராம்பு,  வேர்க்கடலை, கேழ்வரகு முக்கிய பயிர்களாகப்  பயிரிடப்படுகின்றன.

வடக்கிலுள்ள தாழ் நிலங்கள்

தென் ஆற்காடு,  வட ஆர்க்காடு,  செங்கல்பட்டு,  சென்னை ஆகிய பகுதிகளில் ஓடும் செய்யாறு,  பாலாறு,  தென்பெண்ணை,  ஆரணியாறு முதலியன  பாயும்,  இப்பகுதிகளில்  நெல்,  கரும்பு, கம்பு,  வேர்க்கடலை,  கேழ்வரகு முக்கிய பயிர்களாக பயிரிடப்படுகின்றன.

 அனைகளும் ஏரிகளும்

 மேட்டூர்,  மணிமுத்தாறு,  பரம்பிக்குளம்,  ஆரணியாறு, அமராவதி, வைகை, சாத்தனூர்,  மேலணை, கல்லணை,வீடுர்  போன்ற அணைத் திட்டங்கள் நீர்ப்பாசனத்தை ஊக்குவிப்பதோடு மின்சாரம் பெறவும் வகை செய்கின்றன.  ஆற்று வசதி இல்லாத சில இடங்களில் ஏரிகள் காணப்படாவிட்டாலும் பல்லவர்,  தோழர் காலங்களில்,  பல ஏரிகள் விட்டுவிக்கப்பட்டு  நீர் பாசனம் செய்யப்பட்டன.  புழல் ஏரி, மதுராந்தகம் ஏரி,  செம்பரம்பாக்கம் ஏரி,  பொன்னேரி,  வீராணம் ஏரி போன்ற பல ஏரிகள் நீர்ப்பாசனத்திற்கு உதவுகின்றன.

தமிழ் நாடு மண் வகைகள்

வளமுள்ள வண்டல் மண்ணில் நெல், கரும்பு,  வாழை போன்றவை வளம் பெறுகின்றன.  கருநிறமுள்ள  கரிசல் மண் கோவை,  மதுரை மாவட்டங்களில் காணப்படுகின்றது.  அமிலச் சத்து அதிகமுள்ள சரளை மண் மலைச்சரிவுகளில் தேயிலை பயிரிட வகை செய்கின்றன.  இவை உதகையில் உள்ளன.  சரளை மண்ணுடன் களிமண் கலந்து காணப்படும் நிலத்தில் நிலக்கடலை,  கம்பு,  கேழ்வரகு,  சோளம் பயிரிடப்படுகின்றன. இவை வட ஆற்காடு, திருச்சி,  கன்னியாகுமரி முதலிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

தமிழ் நாடு  கனிம வகைகள்

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது.  இரும்பு,  பாக்சைட்போன்ற உலோக தாதுப்பொருட்கள் சேலம் மாவட்டத்தில் கிடைக்கின்றன.  திருச்சியில் உள்ள கல்லக்குடி,  சேலத்தில் உள்ள திருச்செங்கோடு,  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு,  தாழையூத்து,  வள்ளியூர்,  சாத்தான்குளம் ஆகிய இடங்களில் சுண்ணாம்புக்கல் கிடைக்கின்றது.  கடற்கரையோர பகுதிகளில் குறிப்பாக மரக்காணம்,  தூத்துக்குடி, திருச்செந்தூர் போன்ற இடங்களில்,  உப்பளங்கள் உள்ளன.

தமிழ் நாடு துறைமுகங்கள்

சங்க காலத்தில் காணப்பட்ட துறைமுகங்களில் ஏதும் தற்போது சிறப்பாக இல்லாமல் இருப்பினும்.  சென்னை,  பாண்டி,  தூத்துக்குடி போன்ற பெரிய துறைமுகங்களும். பரங்கிப்பேட்டை,  கூடலூர்,  தரங்கம்பாடி,  தலைமன்னார்  போன்ற சிறிய துறைமுகங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவைகள் பலவகை பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்ய பயன்படுகின்றன.

தட்பவெப்ப நிலை

தென்மேற்கு பருவக்காற்றும்,  வடகிழக்கு பருவக்காற்றும்  தமிழகத்தில் நல்ல பலனை அளிக்கின்றன.  கடக ரேகை மத்திய இந்தியப் பகுதியில் இருப்பதால் இந்தியா அதிக வெப்பம் பெற்ற நாடாக உள்ளது.  (மார்ச் 21 முதல் செப்டம்பர் 21 வரை நில நடுக்கோட்டிற்கு வடக்கே சூரியக்கதிர்கள் விடுவதா ஏப்ரல் முதல் ஜூலை வரை வெப்பம் அதிகமாக உள்ளது. செப்டம்பர் 22 முதல் மார்ச் 20 வரை சூரியனின் கதிர்கள் நில நடுக்கோட்டிற்கு தெற்கே விழுவதால் அம் மாதங்களில் குளிர் அதிகமாக உள்ளது.
இத்தகைய இயற்கை அமைப்பையும் கலைச்செல்வங்களையும் தட்பவெப்ப நிலையையும் கொண்ட தமிழகம்,  பெரும் மக்கள் தொகை கொண்ட நெருக்கமுள்ள பகுதியாகவே காணப்படுகின்றது.

Tamil Nadu History in Tamil Tamil Nadu Sangam Age Coins History in Tamil  Konerirayan Coin in Tamil
பல்லவர்கள் வரலாறு ஈரோடு மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம
தர்மபுரி மாவட்டம் கடலூர் மாவட்டம் மாமல்லபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம கிருஷ்ணகிரி மாவட்டம கரூர் மாவட்டம
சோழர் வரலாறு